அடுத்தவர்களுக்கு உதவுவதே உண்மையான மகிழ்ச்சி – கலங்கவைக்கும் “எப்சிபா” குறும்படம்

257

மாற்றத்தை விரும்புவோர் பலர். அதற்காக பலர் உழைக்கிறார்கள், செயற்படுகிறார்கள். அந்த வகையில் இந்த படமும் ஒன்று.

உழைத்து உதவ ஆசைப்படும் சிறுமியும், பிறர் காசென்றாலும் அது களவாகவோ, பறிமுதலாகவோ இருந்தாலும் அதைவிட ஒரு உணவுக்கான சேமிப்பு என்றாலும் சிலருக்கு தேவை குடி மட்டுமே. அதனால் வரும் சில நேர மயக்கமும் பல நாள் கௌரவ இழப்பும் சோர்வும் என்பதை புரிந்தும் திருந்துவாரில்லை.

இரண்டு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் வயது வேறுபாடு கொண்ட பிள்ளைகள். அண்ணன் குடிகாரன், தங்கை சிறுமி.

புத்தாடையோடு தேவாலயம் சென்ற சிறுமி பழைய ஆடையோடு வந்த சிறுமிக்கு உதவ பணம் சேகரிக்கிறார். அந்த பணம் என்ன ஆனது, குடிகார அண்ணன் தங்கைக்காக திருந்துவாரா??? என்பது மீதிக்கதை.

சிறுமியில் பெயரில் படத்தின் பெயர் அமைத்திருக்கிறது. கண்ணீர் சொரிய வைத்திருக்கிறார் இயக்குனர். பாத்திர ஆக்கம் சிறப்பு. மனதை கவர்ந்த பாத்திரம் தங்கையும் சிறுமியும்.

படம் காட்சிப்படுத்தப்பட்ட விதம் அழகு, கிறிஸ்தவ குடும்பத்தினை வைத்து இந்த கதை நகர்த்தப்பட்டிருக்கிறது. படத்தில் சிறிதளவான பாத்திரங்களே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இசை படத்தை சிறப்பாக ஈர்த்து செல்கிறது. ஒலிவிளைவுகளும் ஒத்து போகிறது. படத்திற்கு வலுவாய் இருக்கின்றன.

களத்தெரிவுகள் சிறப்பு. உண்டியல் உடைக்கும் இடம் சிறந்த காட்சிப்படுத்தல். அலட்டல் இல்லா தெரிவு.

ஒரு கலைப்படைப்பு சமூகத்தை விழிப்படைய செய்யவும் வேண்டும், அதேவேளை மனதுக்கு விருப்பாகவும் அமையவேண்டும்.

இந்த படம் பெண்கள், சிறுவர்கள் அதிகம் விரும்பி பார்ப்பார்கள், சேமிப்பு முறையை கூட தொடர்வார்கள்.

சிறந்த கதை. இயக்குனர் இதே போல் பல கலைப்படைப்புகளை உருவாக்க வேண்டும். இங்கு சமூக மீதான அவரது பார்வை ஆரோக்கியமானது. அவர் எடுத்தும் சொல்லும் முறையும் ஆரோக்கியமானது.

இது மொபைலில் எடுக்கப்பட்ட குறும்படம் என்பதால் ஒளிப்பதிவு தெளிவாக இருந்தாலும் ஆட்டம் (Shake) குறையவில்லை.

மொபைலிலேயே முழு நீளத்திரைப்படம் எடுக்கும் இந்தக்காலத்தில் அதற்கு தேவையான உப உபகரணங்களையும் கொண்டே சிறப்பாக படம்பிடித்திருக்கலாம். இனிவரும் படைப்புக்களில் விட்ட குறையை தீர்ப்பார்கள் என்று நம்புகின்றோம்.

வாழ்த்துக்கள் படக்குழுவிற்கு.

CONCEPT DESIGNER MANOJ SIVAPIRAGASAM

BGM and MIXING MASTERING THIVSHANTH GOBINATH

EDITING CHRIS DHANU (STUDIO DC)

DI PIRUTHAPAN (STUDIO DC)

CAST | JEGAN JEEVARAJ | EASWARAN RAJANI | J. T. JATHEESAN | LIYA HELLINAA. A | CHRISTINA ARULNESAN