லூஸிக்கு ‘U’ – ஜூன் 17 திரையரங்கம் வருகிறாள்!

1456

பூவரசி மீடியா தயாரிப்பில் ஈழவாணி இயக்கத்தில் உருவாகியுள்ள “லூஸி” திரைப்படத்திற்கு “யு” தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் இயக்குனர் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து திட்டமிட்டபடி எதிர்வரும் ஜூன் 17 ஆம் திகதி திரைக்கு வருகின்றது “லூஸி” திரைப்படம். முதல் காட்சி யாழ். ராஜா திரையரங்கில் காண்பிக்கப்படவுள்ளதுடன் மறு நாள் (18 ஆம் திகதி) வவுனியாவிலும் இத்திரைப்படம் திரையிடப்படவுள்ளது.

லூஸி திரைப்படத்தில் அபயன் கணேஷ், பூர்விகா இராசசிங்கம், இதயராஜ், தர்ஷி பிரியா, சுகிர்தன், ஜொனி ஆன்ரன், கௌசி ராஜ், ஆர்.ஜே.நெலு, ஷாஷா ஷெரீன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்தப்படத்திற்கான ஒளிப்பதிவை ரெஜி செல்வராசா மேற்கொண்டுள்ளதுடன், பத்மயன் சிவா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.