பல சர்வதேச விருதுகளை வென்ற விமல்ராஜின் “வெள்ளம்” குறும்படம்

312

சென்னை திரைப்பட விழா, ரொரண்டோ தமிழ் திரைப்பட விழா என பல சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளை வென்ற குறும்படம் விமல்ராஜின் “வெள்ளம்”.

இந்தத் திரைப்படம் சில வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அண்மையில் இது யு-ரியூப்பில் பகிரப்பட்டுள்ளது.

10 வருடங்களுக்கும் மேலாக இந்த துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் விமல்ராஜின் குறும்படங்களுக்கு என்று தனிப்பாணி இருக்கின்றது. முக்கியமாக எம்மைச்சுற்றி நடக்கும் விடயங்களை (சமூகப்பிரச்சனை) படமாக்குவதில் அவர் கைதேர்ந்தவர்.

அவரது சமூக நோக்கில் உதிர்த்த மற்றுமொரு கரு “வெள்ளம்”. அட்டகாசமான திரை நகர்த்தலுடன் கதையை அமைத்திருக்கின்றார். ஒரு இயக்குனராக மட்டுமின்றி ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் அவரே கவனித்துள்ளமை கூடுதல் சிறப்பு.

ஜனுசன், மலர், வசந்தியுடன் நடித்த அந்த பூனையையும் படத்தில் குறிப்பிடத்தவறவில்லை விமல்ராஜ். இக்குறும்படத்திற்கான இசை பிரியன்.

Directed by – Vimalrajh Music – Priyan Actor’s – Janushan, Cat, Malar, Vashanthy