யாழ். மண்ணில் “ஒருத்தி“ திரையிடலும் கலந்துரையாடலும்

276

கனடாவிலும் யாழ். மண்ணிலும் படமாக்கப்பட்ட Ps.சுதாகரனின் ஒருத்தி திரைப்படம் அண்மையில் யாழ். காரைநகர் இந்துக்கல்லூரியில் திரையிடப்பட்டது.

இதில் பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், திரைக்கலைஞர்கள், ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கனடாவைச் சேர்ந்த Ps.சுதாகரன் “ஒருத்தி” படத்தை தொடர்ந்து “ஒருத்தி 2” படத்தையும் இயக்கியுள்ளார். அப்படம் கனடாவைத் தொடர்ந்து பிரான்ஸிலும் அண்மையில் திரையிடப்பட்டது.

இந்நிலையில், “ஒருத்தி 2” திரைப்படத்தையும் விரைவில் இலங்கையில் திரையிட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.