ஐ போன் 13 இல் படமாக்கப்பட்ட சமூக விழிப்புணர்வுக் குறும்படம் “தன்னிலை மற”

177

போதைப்பொருள் பாவனை நம் சமூகத்திடையே எப்படி வேரூன்றி உள்ளது என்பதையும் அதன் பாதிப்பையும் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது துலக்ஷனின் “தன்னிலை மற” குறும்படம்.

ரெக்ஸியின் கதையில் உருவான இப்படத்தில் ஷாஜா, மொரிஸ், டாரு, ஆர்கே கஜா, துலக்ஷன், நிவேதனா தயாபரன், சசிகுமார், பிரலக்ஷன், சஞ்ஜூகன், ரிஃப்லா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு, படத்தொகுப்புடன் கூடுதலான இசைப்பணிகளையும் கவனித்துள்ளார் ரெக்ஸி. இந்தப்படம் ஐ போன் 13 முற்றுமுழுதான படமாக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு, இசை என்பன கவனிக்க வைக்கின்றது.

தமது பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் எவ்வளவு தூரம் அவதானமாக இருக்க வேண்டும் என்பதை படம் விழிப்பூட்டுகின்றது. பணம் மட்டுமே வாழ்க்கையாக அமைந்து விடாது, பணத்துக்காக குடும்ப சந்தோசத்தை இழந்துவிட வேண்டாம் என்பதையும் ஆணித்தரமாக சொல்லிப்போகிறது படம்.

நல்லதொரு விழிப்புணர்வு படத்தை தந்த துலக்ஷன் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

Story – Rexy
Write & Direct – Thulakshan
DOP – Rexy | Edit – Rexy | Poster Design – Thulakshan
Music & Sound Design – Rexy | Recorded at studio Pk
Cast – Shaja, Moris, Dharu, RK kaja, Thulakshan
Neventhana Thayaparan, Sasikumar, Pralakshan, Sanjukan, Rifla
Artdirection – Thulakshan
Dubbing Artist -Angu ,Kajan & Anjali