தமிழனின் பெருமையைக் கூறும் “ராவண தேசத்து தமிழா” பாடல் செப்.10 ரிலீஸ்!

1071

VK Brothers விஜி & கவாஷ் தயாரிப்பில் T.வினோத் இயக்கத்தில் VM Film Makers உருவாக்கத்தில் வெற்றி சிந்துஜனின் இசையில் வாகீசன், வினோத், றமணன், வெற்றி சிந்துஜன் ஆகியோரின் குரலில் விதுசனின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பில் உருவாகியுள்ள தமிழனின் பெருமையை கூறும் பாடல் “ராவண தேசத்து தமிழா”.

மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப்பாடல் எதிர்வரும் செப்டெம்பர் 10 ஆம் திகதி பூநகரியில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றில் வெளியிடப்படவுள்ளதாக பாடலின் இயக்குனர் வினோத் குவியத்திடம் தெரிவித்தார்.

“உனைச்சேரவே” பாடலின் பின்பாக வினோத் இயக்கும் இந்தப்பாடலின் வரிகளை எழுதியவரும் அவரே! சஜீவ, சுஜானா ஆகியோர் பிரதான பாத்திரமேற்று நடிக்கும் இதில், ஹிமாலயா நடனக்குழுவின் கலைஞர்களும் நடித்துள்ளனர். பாடலுக்கான நடன இயக்கத்தை ஹிமாலயா வாகீசன் மேற்கொண்டுள்ளார்.

மேலும், “ராவண தேசத்து தமிழா” பாடலின் இணை இயக்குனராக சுவீகரன் பணியாற்றியுள்ளதுடன், ரகீதன் மற்றும் பிரியங்கன் உதவி இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். தயாரிப்பு முகாமையாளராக லோகிதன் பணிபுரிந்திருப்பதுடன், கலை இயக்கம் மற்றும் ஒப்பனை பணிகளை டாரியன் கவனித்துள்ளார். அதேபோல, அகல் உம் ஒப்பனையாளராக பணியாற்றியுள்ளார்.