திலீப் வர்மன் இசையில் சுகிர்தன் இயக்கத்தில் “ஒரு நாளின் கனவுகள்” பாடல் வெளியீடு

609

தயாரிப்பாளர் ரவிபிரதீப் கிருஷ்ணநிதி அவர்களின் “SHAN DIGITAL STUDIO” உடைய தயாரிப்பில் அவரின் 10 ஆவது படைப்பாக வெளிவந்துள்ளது ”ஒரு நாளின் கனவுகள்“. பாடல்.

இதன் வெளியீட்டு நிகழ்வு நேற்று (17) மாலை யாழ்ப்பாணம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் இடம்பெற்றது. விருந்தினர்கள், கலைஞர்கள், ஆர்வலர்கள் என பெருமளவிலானோர் இதில் பங்கேற்றிருந்தனர்.

பிரபல பாடகர் மற்றும் இசை அமைப்பாளர் “Dr. திலீப்வர்மன்” அவர்களின் இசை மற்றும் குரலில் உருவான இந்தப்பாடலை காணொளிப்பாடலாக சுகிர்தன் கிறிஸ்துராஜா இயக்குகியுள்ளார்.

மிருணன் மற்றும் சௌதமினி சாந்தகுமார் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் பாடலுக்கான ஒளிப்பதிவினை அலெக்ஸ் கோபியும் படத்தொகுப்பினை நிவேதிகனும் செய்துள்ளனர். கலை இயக்கம் பிரதாப், ஒப்பனை Vt அனுஷா. டிசைன்ஸ் நிலான்.

A Dhilip Varman Musical

Mirun Mirunan | Showthamini Shanthakumar
Director: Sukirthan Cristhuraja
DOP: Alex Kobii
DESIGN: Nilaan Jaffna
Makeup artist: Vt Anusha
Editing: Nive Nivethigan Vj
Art direction: Prathab Rion