வாகீசன் vs வினோத் சொல்லிசை யுத்தத்தில் “ராவண தேசத்து தமிழா” பாடல்

947

பத்தாவது தடவையும் நிலத்தில் வீழ்ந்த தமிழனை முத்தமிட்டு சொன்னது பூமி
ஒன்பது தடவையும் எழுந்தவனல்லவா நீ.. எழுந்திடு தமிழா.. நீ.. நிமிர்ந்திடு திமிராய்..

என்ற வைர வரிகளுடன் ஆரம்பிக்கும் பாடல் ”ராவண தேசத்து தமிழா”. தமிழனின் பெருமையைக் கூறும் வகையில் அட்டகாசமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப்பாடல் அண்மையில் பூநகரி மண்ணில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

VK Brothers விஜி & கவாஷ் தயாரிப்பில் T.வினோத் இயக்கத்தில் VM Film Makers உருவாக்கத்தில் வெற்றி சிந்துஜனின் இசையில் வாகீசன், வினோத், றமணன், வெற்றி சிந்துஜன் ஆகியோரின் குரலில் விதுசனின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பில் இந்தப்பாடல் வெளியாகியுள்ளது.

வில்லிசை பாடிய காலங்கடந்து
சொல்லிசை பாடிட நேரங்கனிந்து
வல்லின மெல்லின வார்த்தைகளெல்லாம்
வில்லினில் புறப்பட்ட அம்புகளானது.

ஈசனை மயக்கிடும் வீணையை மீட்டிடும்
ராவண தேசத்து தமிழனிவன்.
பாரினை போற்றிடும் பாக்களை சொரிந்திடும்
ஈழத்து சொல்லிசைப் புலவனிவன்.

என ஆரம்பிக்கும் சொல்லிசை யுத்தம் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் நன்றாகவே இருக்கின்றது. வாகீசனும் வினோத்தும் அனல்பறக்க இந்த சொல்லிசை யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“உனைச்சேரவே” பாடலின் பின்பாக வினோத் இயக்கும் இந்தப்பாடலின் வரிகளை எழுதியவரும் அவரே!

சஜீவ, சுஜானா ஆகியோர் பிரதான பாத்திரமேற்று நடிக்கும் இதில், ஹிமாலயா நடனக்குழுவின் கலைஞர்களும் நடித்துள்ளனர். பாடலுக்கான நடன இயக்கத்தை ஹிமாலயா வாகீசன் மேற்கொண்டுள்ளார்.

மேலும், “ராவண தேசத்து தமிழா” பாடலின் இணை இயக்குனராக சுவீகரன் பணியாற்றியுள்ளதுடன், ரகீதன் மற்றும் பிரியங்கன் உதவி இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர்.

தயாரிப்பு முகாமையாளராக லோகிதன் பணிபுரிந்திருப்பதுடன், கலை இயக்கம் மற்றும் ஒப்பனை பணிகளை டாரியன் கவனித்துள்ளார். அதேபோல, Akal by Shagi உம் ஒப்பனையாளராக பணியாற்றியுள்ளார்.

Music : Vetti Sinthujan
Lyrics & Direction – Vinoth
Singers : Vaheeshan , Vinoth , Vetti Sinthujan , Ramanan
Editor – Kvm Vithu
Producer : Vijayakumar & Kavash ( VK Brothers )
Dop – Kvm Vithu , Mugunth Vinu