10,000 பார்வைகளைக் கடந்த விக்கி விக்னேஷின் ”Block பண்ணும் போராளிஸ்” பாடல்

283

ஊடகப்பரப்பில் பலராலும் அறியப்பட்ட விக்கி விக்னேஷ் தனது முதலாவது பாடலான ”Block பண்ணும் போராளிஸ்” (புது தமிழ் Reggae) பாடலுடன் அண்மையில் அறிமுகமானார். அந்தப்பாடல் தற்சமயம் யு-ரியூப்பில் 10 ஆயிரம் பார்வைகளைக் கடந்துள்ளது.

இந்தச் சந்தோசத்தை தன் பேஸ்புக் பக்கத்தில் கீழ்வருமாறு பதிவு செய்துள்ளார்.

எனது முதலாவது பாடல் வெளியாகி ஒரு மாதம் ஆகப்போகிறது. நான் நினைத்ததெல்லாம் ஒரு 500 வீவ்ஸ் கிடைத்தால் அதுவே பெரிய விடயம் என்றுதான். காரணம் ஒரு யூடியூப் செனலை ஆரம்பித்து நடத்தி அதற்கான வரவேற்பை பெறுவது என்பது மிக கடினமான பணி. அனுபவத்தில் பல தோல்விகளை கண்டிருக்கிறேன். இருந்தாலும் எனது முதலாவது பாடல் 10k வீவ்ஸ் தாண்டி இருப்பது ஒரு பெரிய மகிழ்ச்சி.

அதேநேரம் இந்த பாடலுக்கு கிடைத்த ஆதரவும் நான் நினைத்து பார்க்காத ஒன்றுதான். ஊடக நண்பர்கள் பலர் எனக்கு தந்த முக்கியத்துவம், ஒத்துழைப்பு என்பன மறக்க முடியாத விடயங்கள். இந்த ஒத்துழைப்புகள் இந்த துறையில் இன்னும் ஓடலாம் என்ற தட்டிக்கொடுக்கப் வழங்குகின்றன.

Of course, என் பாடலில் வரும் வரியைப் போல “உதவி தேவனா கேட்க சொன்னவங்க ஒருத்தரும் உங்கள் நினைக்க மாட்டாங்க” என்பதை நிரூபிக்க சில நண்பர்கள் உறுதியளித்துவிட்டு பின்னர் பதிலளிக்காமல் போனார்கள். அவர்கள் பற்றின கவலையில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் ஆதரவு மிக முக்கியம். அது ஓரளவுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது. அனைவருக்கும் அன்பும் நன்றியும்….

Lyrical Video வாக வெளிவந்திருக்கும் இந்தப்பாடலில் பணியாற்றியோர் விபரம் 👇

Music composed
Lyrics
Vocal
Vikey Wignesh

Mixing And Mastering
Studio 51Hz – Colombo

Graphics and Visual Editings
Sakthi – @aivarimusic