நவ.02 “நகர லயம்” கொழும்பில் திரையிடல் – #TICKETSSOLDOUT இயக்குனர் மகிழ்ச்சி!

882

WINDSOR புரொடக்ஷன் தயாரிப்பில் பிரவீன் கிருஷ்ணராஜாவின் இயக்கத்திலும் எழுத்திலும் உருவாகியுள்ள “நகரலயம்“ குறும்படம் எதிர்வரும் 2 ஆம் திகதி மாலை 04 மணிக்கு Colombo City Centre இல் அமைந்துள்ள Scope Cinemas இல் திரையிடப்படவுள்ளது.

இந்நிலையில் குறித்த காட்சிக்கான அனைத்து ரிக்கெட்டுக்களும் விற்று தீர்ந்துள்ளதாக இயக்குனர் பிரவீன் தனது பேஸ்புக் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

“நகர லயம்” படம் மலையக மக்களின் முக்கியமான ஒரு பிரச்சனையைப் பேசுவதாக இயக்குனர் குறிப்பிட்டுள்ளார். இதில், சச்சின் செந்தில்குமரன், வேணுகா ரட்ணம் ஆகியோர் பிரதான பாத்திரமேற்று நடித்துள்ளதுடன், வி.டி.போல்ராஜ், ராகுல் பாக்கியராஜா, பி.ரி.செல்வம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இதன் ஒளிப்பதிவை தீகாயு திசாநாயக்க மேற்கொண்டிருப்பதுடன் ஏஞ்சலோ ஜோன்ஸ் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். அனுஷான் நாகேந்திரன் இசையமைப்பாளராக இணைந்துள்ளார்.

மேலும் நகரலயம் குறும்படத்தில் உதவி இயக்குனர்களாக கௌதம் மற்றும் குட்வின் ஆகியோர் பணியாற்றியிருப்பதுடன், ஒப்பனைக் கலைஞராக விதுர பணிபுரிந்துள்ளார். SFX பணிகளை ஏ.ஜே.ஷங்கர்ஜன் கவனித்துள்ளார்.