CV லக்ஸ் இசையில் “புங்குடுதீவே” காணொளிப்பாடல்

336

TRM Pictures தயாரிப்பாக சிவி லக்ஸ் இன் இசை மற்றும் ராப் வரிகளில் உருவாகியுள்ள பாடல் “புங்குடுதீவே”.

புங்குடுதீவு மண்ணின் பெருமைகளை பேசும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பாடலுக்கான வரிகளை இணுவையூர் நித்தியதாஸ் எழுதியுள்ளார். என்.ரமணன் பாடியுள்ளார்.

பாடலுக்கான ஒளிப்பதிவை ஏ.கே.கமல் மேற்கொண்டிருப்பதுடன், தனோஜன் படத்தொகுப்பை செய்துள்ளார். ட்ரோன் மூலமான காணொளிகளை ரெஜி செல்வராசா மற்றும் தனோஜன் பதிவு செய்துள்ளனர்.

ஒப்பனைக்கலைஞர்களாக டாரியன் மற்றும் லிவிங்ஷா ஆகியோர் பணியாற்றியிருப்பதுடன் குழுவினர் SWASTHIC FINE ARTS நடனம் அமைத்துள்ளனர்.

இதயராஜ், லக்ஷனா ஆகியோர் பிரதானமாக நடித்திருக்கும் இப்பாடலில் இசையமைப்பாளர் சிவி லக்ஸ் மற்றும் பகிடியா கதைப்பம் குழுவினரும் தோன்றியுள்ளனர்.

பிறந்த மண்ணின் பெருமை பேசும் பாடலாக காணொளி வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் புங்குடுதீவின் அழகை கனகச்சிதமாக ஒளிப்பதிவு செய்துள்ளனர். அதற்கு ட்ரோன் காட்சிகள் பக்கபலமாக அமைந்துள்ளன.

பாடலின் கரு மற்றும் இசைக்கு ஏற்ப அதனை அழகாக காட்சிப்படுத்தி இயக்கியுள்ளார் ஏ.கே.கமல்.

MUSIC & RAP : CV LAKSH
KEYS : STEVE
LYRICS : NITHIYATHAS
SINGER : N. RAMAMAN
CINEMATOGRAPHY : AK KAMAL
ASSOCIATE CAMERA : M.N.SHERON
DRONE : REJI SELVARASA & THANOJAN
EDITOR : THANOJAN
DANCE : SWASTHIC FINE ARTS
MAKEUP ARTIST : DARIEN & LIVINGSHA
CAST : ITHAYARAJ – LAKSHANA & PAKIDIYA KATHAIPPAM TEAM