ராஜ் சிவராஜின் “டக் டிக் டோஸ்“ பட ட்ரெயிலர் வெளியீடு

191

Black Board International சார்பாக கிறிஸ்சோபன் தயாரிப்பிலும் Swiss (Solothurn) Kori இணைத்தயாரிப்பிலும் ராஜ் சிவராஜ் இயக்கத்திலும் உருவாகிவரும் திரைப்படம் “டக் டிக் டோஸ்”.

இதன் ட்ரெயிலர் நேற்று (26) மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் வெளியீடு செய்யப்பட்டப்பட்டது. இதில், படக்குழுவினர், விருந்தினர்கள் மற்றும் ஊடகவியாளர்கள் கலந்து கொண்டனர்.

ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்வில் இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளரின் உரைகள்..

“புத்திகெட்ட மனிதர் எல்லாம்“ என்ற வெற்றித்திரைப்படத்தை தந்த கூட்டணி நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ள புதிய படைப்பு “டக் டிக் டோஸ்”. இந்தப்படத்திலும் முன்னைய படத்தில் பணியாற்றிய அநேகர் பணியாற்றியுள்ளனர்.

பூவன் மதீசன் இசையமைக்க ஒளிப்பதிவாளராக ஏ.கே.கமல் இணைந்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை அருண் யோகதாசன் கவனித்துள்ளார்.

”எமக்கான காலம் வரும் போது, எமக்கான கதைகளை சொல்வோம். அதற்கு முதலில் நாம் யார் என உலகிற்கு சொல்லி விட்டு , எமக்கான கதைகளை பேச தொடங்குவோம்” என இயக்குனர் ராஜ் சிவராஜ் நேற்றைய ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்வில் தெரிவித்துள்ளார். 

ட்ரெயிலரைப்பார்க்க..