பொண்ணு சிரிச்சா…😁 திஷோன் இசையில் கலகலப்பான “கனகா” பாடல்

253

“பொண்ணு சிரிச்சா சில்லறை கலகல..” என்று ஆரம்பிக்கும் வரிகளுடன் கூடிய பாடல் (Short video) கடந்த சில மாதங்களாக டிக் டொக் வலைத்தளத்தில் ட்ரெண்டிங்காக இருந்தது. “எப்பய்யா முழுப்பாட்டையும் ரிலீஸ் பண்ணுவீங்க?” என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் “கனகா” பாடல் இன்று (03) வெளியாகியுள்ளது.

திஷோன் விஜயமோகன் இசையில் உருவாகியுள்ள இந்தப்பாடலுக்கான வரிகளை வாகீசன் ராசையா எழுதியுள்ளார். திஷோனுடன் இணைந்து வாகீசனும் அட்விக் உதயகுமாரும் பாடலைப்பாடியுள்ளனர். பத்மயன் சிவா இசைக்கலவையினை மேற்கொண்டுள்ளார்.

காணொளிப்பாடலை Brightmoon Production உடன் இணைந்து கதிர் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் Brightmoon Production மேற்கொண்டுள்ளது. சுஜி சித்தா மற்றும் Shadow Kash ஆகியோர் பாடலுக்கான நடனத்தினை அமைத்துள்ளனர். ஒப்பனை சுரேகா. கலை இயக்கம் டேரியன்.

பாடலைப்பாடிய திஷோன், வாகீசன் மற்றும் அட்விக் ஆகியோரே பாடலிலும் முதன்மை நாயகர்களாக நடித்துள்ளனர். நாயகிகளாக வைஷ்ணவி, மதுமதி, திஜானிகா ஆகியோர் நடித்துள்ளனர். தயாரிப்பு மேலாளர்களாக உஷானந்த் மற்றும் நிரூபன் ஆகியோர் பணியாற்றியிருப்பதுடன் கிளின்டன் மற்றும் கேமல் ஆகியோரும் தயாரிப்புக்குழுவில் பங்கேற்றுள்ளனர்.

பாடலை அருள் தேவா தயாரித்திருப்பதுடன் The Show Time Bar உம் கைகோர்த்துள்ளார்கள். போஸ்டர் வடிவமைப்பு ரஜீவன் தயாபரன்.

ரப் சிலோன் குழுவினர் படைத்திருக்கும் இந்தப்பாடல் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமில்லை என்பதுடன், பாடல் வெளியாக முன்பே அது பலத்த எதிர்பார்ப்பையும் தூண்டியிருந்தது. “பொண்ணு சிரிச்சா..” என ஆரம்பிக்கும் பல்லவி மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுகிறது.

சொல்லிசைப் பகுதிகளும் அதற்கான நடன அமைப்பும் அட்டகாசம். நிறைய நடனக்கலைஞர்களை வைத்து கலகலப்பாக இந்த பாடலுக்கு நடனம் அமைத்திருக்கின்றனர் சுஜி சித்தா மற்றும் Shadow Kash. Brightmoon Production ஒரு காணொளிப்பாடலுடன் முதல் தடவையாக களமிறங்கியிருக்கிறார்கள். அனைத்தையும் ஒன்றிணைத்து அட்டகாசமாக பாடலை இயக்கியுள்ளார் கதிர்.

PRODUCER : Arul Theva &
SPONSORED : The Show Time Bar
DIRECTION: Kathir & Bright Moon
LYRICS : Vaaheesan Rasaiya, Kambar
VOCALS : Thishon Vijayamohan, Vaaheesan Rasaiya, Advik Uthayakumar
MIX & MASTERING : Pathmayan Sivananthan (10s Studio)
RECORDED : @Max studios (Jaffna)
PRODUCTION HEAD : Ushananth & Niruban
PRO TEAM : Kilinton & Kemal
DOP & EDIT : Brightmoon Production
ART DIRECTION : Dariyan
CHOREOGRAPHY : Suji Sitha & Shadow Kash
MAKEUP ARTIST : Sureka Bridal and Beauty Care
STARRING : Vaishnavi, Madhumathy, Thijaanika
PUBLICITY DESIGNER : Rajeevan Thayaparan