ஜீவானந்தன் ராமின் “Love Loop” பாடல்

79

நம் நாட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜீவானந்தன் ராமின் புதிய பாடலான “Love Loop” அண்மையில் வெளியாகியுள்ளது. சங்கர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அருண் ஆகியோர் எழுதியுள்ள இந்தப்பாடலை சுதர்சன் ஆறுமுகத்துடன் இணைந்து ஜீவானந்தன் ராம் பாடியுள்ளார்.

அழகான காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இந்தப்பாடலை நரேஷ் நாகேந்திரன் நடனம் அமைத்து இயக்கியுள்ளார். பாடலில் ஜோயல் கிரிஷ் மற்றும் நிபாஜினி ஷண்முகவேல் ஆகியோர் பிரதான பாத்திரங்களாக நடித்துள்ளனர்.

பாடலை அட்டகாசமாக ஒளிப்பதிவு செய்து படத்தொகுப்பு பணிகளையும் கவனித்துள்ளார் அருள்செல்வம். Love Loop பாடலில் ஜோயல் மற்றும் நிபாஜினியின் நடிப்பும் அபாரம். அழகான இளமை ததும்பும் பாடலாக இதனை வழங்கியுள்ளனர்.