கனடா தமிழ் பசங்களின் புதிய வெளியீடு “அடியே கோவக்காரி”

537

கனடா தமிழ் பசங்க தயாரிப்பில் ஆதிஷ் AK இசையில் வெளிவந்துள்ள பாடல் “அடியே கோவக்காரி”.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இந்தப்பாடலை வீணா AE இயக்கியுள்ளார். ரகு பிரணவன் மற்றும் வீணா AE ஆகியோர் எழுதியுள்ள இந்தப்பாடலை ரகு பிரணவன், வீணா AE உடன் இசையமைப்பாளர் ஆதிஷ் AK உம் பாடியுள்ளார்.

இயக்கியதோடு மட்டும் நின்றுவிடாது அட்டகாசமாக நடனத்தையும் அமைத்துள்ளார் வீணா. பிரவீணா டான்ஸ் அகடமியைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

ஒரு கலர்ஃபுள் கொண்டாட்டத்தை தனது கமெராவுக்குள் சிறைப்பிடித்து ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார் சாம் டில் ருக்ஷான். மொஷிகரனின் கலை இயக்கமும் பாடலுக்கு பக்கபலம்.

Copyrights ©️ Canada Tamil Pasanga