ஒன்றுபட்டால் வெற்றி பெறலாம் – தூவானம் 100ஆவது திரையிடலில் பேராசிரியர் ஸ்ரீசற்குணராசா உருக்கமான பேச்சு!

262

தனி மனிதன் தேவர்கள் போல அனைத்து சக்திகளும் நிரம்பப்பெற்றவன் அல்ல, எனவே அனைவரும் ஒன்றுபடும் போது தான் வெற்றி பெறலாம். மக்கள் ஆதரவளிக்காது விட்டால் வெற்றி பெற முடியாது என தூவானம் 100ஆவது திரையிடலில் யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராசா தெரிவித்தார்.

வைத்தியர் சிவன்சுதன் தயாரிப்பில், விரிவுரையாளர் ரதிதரன் இயக்கத்தில் உருவான “தூவானம்” திரைப்படத்தின் 100 ஆவது திரையிடலும் கலைஞர்கள் கௌரவிப்பும் நேற்று (20) யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். திறமையான பல சினிமா கலைஞர்கள் இருக்கின்றார்கள். மக்கள் ஆதரவு இருந்தால் அவர்களால் வெற்றி பெற முடியும். கலைஞர்கள் ஒன்றுபட்டால் அந்த வெற்றி சாத்தியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அவரது முழுமையான உரையைக் கேட்பதற்கு 👇