கவிராகம் தயாரிப்பில் துஷாந்தன் இயக்கத்தில் “கருத்த பெண்ணே” பாடல்

274

இலங்கை மற்றும் இந்திய கூட்டுத்தயாரிப்பில் உருவாகியிருக்கும் பாடல் “கருத்த பெண்ணே”. இந்தப்பாடலின் ஒலி வடிவம் தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்டிருப்பதுடன் காணொளி வடிவம் இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் சிங்கர் புகழ் மன்னார்குடி ரமேஷ் மற்றும் இன்பக் கலீல் ஆகியோர் பாடியிருக்கும் இந்தப்பாடலை எஸ்.ராஜமாணிக்கம் எழுதியுள்ளார். விஜய் சங்கர் இசையமைத்துள்ளார்.

காணொளிப்பாடலை நடன இயக்கத்தை செய்து இயக்கியுள்ளார் எஸ்.துஷாந்தன். இலங்கேயன் பிக்சர்ஸ் ரெஜி செல்வராசா ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளதுடன் இளங்கோ சிறில் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார்.

அனோத் வர்மா மற்றும் நிலா ஆகியோர் பிரதான நடிகர்களாக பங்கேற்க லோகசீலன், வேணுஜன், திலக்ஷன், அஜித், ஏ.எம்.மொஹமட் மக்தி, எஸ்.மொஹமட் சில்மி, தர்ஷிகா, திரிஷா ஆகியோர் நடனக்கலைஞர்களாக தோன்றியுள்ளனர்.

Music: Vijay Shankar
Singers: Mannargudi Ramesh and Inbak kaleel
Lyrics: S.Rajamanickam
Choreographer: S.Thushanthan
Cinematographer: Reji selvarasa
Editor: Ilanko Cyril
Cast: Anodh varma and Nila