லட்சம் பார்வையாளர்களைத் தாண்டி வெற்றி நடை போடும் “வனரோசா”

179

ராப் சிலோன், கனடா தமிழ் பசங்க, இலங்கேயன் பிக்சர்ஸ் ஆகியன இணைந்து தயாரித்திருக்கும் பாடல் “வனரோசா”.

திசோன் விஜயமோசன் இசையில் வாகீசன் ராசையாவின் வரிகளில் உருவான இந்தப் படலை வாகீசன், திசோன், ஆத்விக் ஆகியோர் பாடியுள்ளனர்.

ரெஜி செல்வராசாவின் அட்டகாசமான ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தில் உருவான இந்தப் பாடலுக்கான நடனத்தை அல்விஸ் கிளின்டன் வடிவமைத்துள்ளார். தேனுசன் இந்தப் பாடலைத் தயாரித்துள்ளார்.

90ஸ் கிட்ஸின் கனவான கல்யாணத்தை கலகலப்பாக பாடலினூடு தந்திருக்கின்றார்கள் வனரோசா குழுவினர். கூடவே, வெளிநாட்டு மாப்பிள்ளைகளையும் வம்புக்கு இழுத்திருக்கிறார்கள். பாடலின் உடை வடிமைப்பு முதல் நடனம் வரை எல்லாமே பாடலுடன் ஒன்றித்துப் போகின்றது.

தொடர்ச்சியான ஹிட் பாடல்களைத் தந்து கொண்டிருக்கும் ராப் சிலோன் குழுவினருக்கு இது இன்னொரு மைல் கல். யு-ரியூப்பில் லட்சத்தை தாண்டி அமோக வரவேற்புடன் பாடல் சென்று கொண்டிருக்கின்றது.

Music : Thishon Vijayamohan
Lyrics : Vaaheesan Rasaiya
Direction & DOP : Reji Selvarasa
Associate & Choreography : Alwish klinton
Cast & Vocal : Vaaheesan Thishon Advik
Designer : Mathus
Producer : Thenushan