மே தினத்தில் முதல்பார்வையை வெளியிடத்தயாராகும் “லூஸி” படக்குழு

1909

பூவரசி மீடியா தயாரிப்பில் ஈழவாணியின் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “லூசி”.

இதில் அபயன் கணேஷ், பூர்விகா இராசசிங்கம், இதயராஜ், தர்ஷி பிரியா, சுகிர்தன், ஜொனி ஆன்ரன், கௌசி ராஜ், ஆர்.ஜே.நெலு, ஷாஷா ஷெரீன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்தப்படத்திற்கான ஒளிப்பதிவை ரெஜி செல்வராசா மேற்கொண்டுள்ளதுடன், பத்மயன் சிவா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் (Trailer) எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

தற்போது, படத்தினுடைய முதற்பார்வையை (First Look) தொழிலாளர் தினமாகிய மே 1 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் ஜூன் முதல் வாரத்தில் படத்தினை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.